இந்தியப் பிரதமரின் கருத்து மிகப்பெரும் கௌரவத்தையம் பெருமையையும் அளித்துள்ளது – முரளிதரன் !

Sunday, May 14th, 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது இலங்கை விஐயத்தின் போது நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறித்து பாராட்டிப் பேசியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  முரளிதரன் இந்தியப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை எனக்கு மிகப்பெரும் கௌரவத்தையம் பெருமையையும் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அட்டன் டீக்கோயாவில் இந்திய வமசாவளி மக்கள கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி, உரையாற்றினார்.; முத்தையா முரளிதரன், மறைந்த தமிழக முதல்வர் எம.;ஜி.ஆர் ஆகியோர் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களால் உலகுக்கு வழங்கப்பட்ட பரிசு என்று குறிபிடடிருந்தார்.

இத தொடாபாகு முத்தையா முரளிதரன் இந்திய செய்தி ஸ்தாபனமான பி.ரி.ஐக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுளார். முரளிதரனின் இந்த விடயத்திற்கு சில ஆங்கில  மற்றும் ஊடகங்கள் முக்கியத்தும் வழங்கியள்ளன.

முரளிதரன் , இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எனது பெயரை இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடு இந்தியா. இந்நிலையில், எனது சொந்த நாட்டில் எனது பெயரையும், நான் சார்ந்த சமூகத்தின் அடையாளத்தையும் அவர் குறிப்பிட்டுப் பேசியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

இந்தியாவுடன் எனக்கு மிகவும் நெருங்கிய உறவு உள்ளது. .எனது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள்தான். நாங்கள் அவர்களது 4 அல்லது 5வது தலைமுறையினர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மிகநெருங்கிய நட்புறவு நிலவுகிறது. இலங்கையின் மூத்த சகோதரனாக இந்தியா உள்ளது.

இலங்கைக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும் என்று நம்புகிறேன் என்று; முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Related posts: