இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 29th, 2023

இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பின்னர் தரம் 6 மாணவர் சேர்க்கைகள் நடைபெறுவதால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.

மேற்கண்ட மாணவர் சேர்க்கை முடிந்தவுடன், மாணவர்களை இடைநிலை வகுப்புகளில் சேர்ப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், என்றார்.

ஏப்ரல் 15ஆம் திகதிக்கு பின்னர் மாதிரி விண்ணப்பம் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க நினைக்கும் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். பாடசாலைகளுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் திட்டத்தின் கீழ் மாணவர் வெற்றிடங்களுக்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.

புதிய திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் தங்கள் மாணவர் சேர்க்கைக்காக அமைச்சிற்கு வந்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: