இடைத்தரகர்கள் இன்றி தேங்காய் விற்பனை!

Saturday, October 7th, 2017

இடைத்தரகர்கள் இன்றி செய்கையாளர்களூடாக நேரடியாக தேங்காய் விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

அதிக இலாபத்தை ஈட்டும் நோக்கில் இடைத்தரகர்கள் தேங்காய்களின் விலையை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவல குறிப்பிட்டார்.இந்த நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு சில்லறை வர்த்தகத்தை ஆரம்பிக்க உள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய, தெரிவு செய்யப்பட்டுள்ள செய்கையாளர்கள் சங்கங்களுக்கு நடமாடும் வண்டிகளைப் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கபில யகந்தாவல தெரிவித்தார்.அரசிடம் காணப்படும் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு கடந்த திங்கட்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, முதற்கட்டமாக 10 இலட்சம் தேங்காய்களை விநியோகிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.அவற்றில் சுமார் மூன்று இலட்சம் தேங்காய்கள் தற்போது விநியோகிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காயின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெங்கு அபிவிருத்து சபை சுட்டிக்காட்டியது.

Related posts: