ஆளுநரை சந்தித்தார் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்!

Wednesday, July 19th, 2017

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை இன்று முற்பகல் அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பினைத் தொடர்ந்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கும், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை இன்று மதியம் 2 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்திக்கவுள்ளார்.

Related posts: