ஆறு மாதங்களுக்குள் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு – பிரதமர்!

Thursday, October 13th, 2016

பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்.

பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து வெளியேறும் அனைத்து பட்டதாரிகளுக்கும் கட்டாயம் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பட்டக் கல்வியை பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்கள் தொழில் இன்றி வீட்டில் இருக்கும் காலம் ஆறு மாதங்களுக்கு வரையறுக்கப்பட வேண்டும்.

இதன்படி, அரசாங்கத்தில் காணப்படும் சகல வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இதற்காக விசேட திட்டமொன்று எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.பட்டதாரிகள் ஏதேனும் ஓர் தொழில் துறையில் பணியாளர்களாக உள்ளீர்க்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர், அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

blogger-image-1075572354

Related posts:


பெரியபுலவு மகா வித்தியாலய சம்பவம்: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என பெற்றோ...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதற்றத்தைத் தூண்டும் செயலில் பாதுகாப்புப் படை ஈடுபடாது - இராணுவத் தளபதி அ...
சீனா – இலங்கை இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் - இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவட...