ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

Monday, August 16th, 2021

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப்போர் தற்போது கடுமையாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: