ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கின்றது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Tuesday, July 14th, 2020

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் வெளியில் வந்து தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த சந்தர்ப்பம் உள்ளதா? என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வினவியுள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பம் காணப்படுமாயின் உடனடியாக அதற்கான நடைமுறைகளை பின்பற்றுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளார்.

Related posts: