ஆசிரியர் ஆட்சேர்ப்புன்னு வடக்கில் நேர்முகத் தேர்வு இந்த மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறும்!

Wednesday, January 4th, 2017

வடக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இந்த மாதம் 16,17,18ஆம்  திகதிகளில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016ஆம் ஆண்டின் 1000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கிடைத்தது. அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட வேளை அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதனால் குறித்த பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. அதன் பெறுபேறும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறித்த பரீட்சைக்கு 2,452பேர் தோற்றியிருந்தனர். இவர்களுக்கு நடந்த இருபாடப் பரீட்சைகளிலும் 40 புள்ளிகள் என்ற அடிப்படையில் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

80புள்ளிகளுக்கு மேல் 779பேர் மட்டுமே பெற்றனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு இந்த மாதம் 16,17,18,ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளன. நேர்முகத் தேர்வின் பின்னர் தகுதியான அனைவருக்கும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே நியமனங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகமானோர் தமிழ், வரலாறு, விவசாயம், உளவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களாக நியமனம் பெறுவர் – என்றார்.

Education-Ministers-Office

Related posts: