ஆசிரியர்களுக்கு சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சு –கல்வி இராஜாங்க அமைச்சர் தகவல்!

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
கொரோனாதொற்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பெரும் தியாகத்தை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் மாணவர்களின் சிரமங்களை மட்டுமல்லாது, ஆசிரியர்களின் சிரமங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் ...
திருமண வீட்டுக்குச் சென்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – பொலிஸார் திவிர விசாரணை!
பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
|
|