அழகியல் பாட ஆசிரியர்கள் வேறு பாடத்துக்கு மாறலாம் – மாகாணக் கல்வித் திணைக்களம்!
Monday, December 31st, 2018
வடமாகாணத்தில் உள்ள அழகியல் பாட ஆசிரியர்கள் வேறு பாட விகுதிக்கு மாற்றலாவதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமாகாண பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக அழகியல் பாட ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்குப் பாடவேளைகளை வழங்க அதிபர்களால் முடியாதுள்ளது. சில ஆசிரியர்கள் நியமனத் திகதி முதல் ஆரம்பக் கல்விப் பாடங்களையும் வேறு பாடங்களையும் கற்பிக்கின்றனர். இவர்கள் இடமாற்றலுக்கு விண்ணப்பித்தால் இடமாற்றலை வழங்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.
அழகியல் பாட ஆசிரியர்கள் வேறு சில பாடங்களையும் பகுதியாகக் கற்றிருப்பார்கள். அவர்களை ஆரம்பக் கல்வி மற்றும் வேறு பாட விதானத்துக்கு மாற்றல் செய்யின் ஆசிரியர் வளப் பகிர்வைச் சீர் செய்ய முடியும். இவர்களுக்கு ஆரம்பப் பாடப்பகுதி அல்லது அழகியல் தவிர்ந்த வேறு பாடங்கள் கற்பிப்பதற்கு ஏதுவாக வேறு பாட வகுதிகளுக்கு நியமனம் வழங்க முடியும்.
இந்த நியமனங்களை வழங்குவதற்கு ஊடாக வெற்றிடம் நிலவும் வலயங்களுக்கு இடமாற்றம் செய்யவும் முடியும். பாடசாலை அதிபர்கள் இந்த விடயத்தை ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் கோரிக்கையை வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும். பாடமாற்றத்துக்கான கோரிக்கைக் கடிதம், நியமனக் கடிதப் பிரதி, பட்டப்படிப்புச் சான்றிதழ், நேரசூசி போன்ற ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|