அரிசி கட்டுப்பாட்டு விலை அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை!

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலை கட்டுப்பாடு காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்கட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அரிசி விலைக் கட்டுப்பாட்டினால் பல சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன கூறியுள்ளார்.
இதேவேளை தாமதித்தாவது அரசாங்கம் விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயித்தமை, நுகர்வோருக்கு நன்மை பயக்கும் எனவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுகிறது - அமைச்சர் மங்கள சமரவீர!
கடும் வெப்பம் – யாழில் மற்றுமொருவர் உயிரிழப்பு!
நடைமுறைக்கு வந்தது புகையிரத நிலையங்களில் யாசகத் தடை!
|
|