அரிசியை விற்பனை செய்ய மறுத்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை!

Wednesday, April 5th, 2017

பணம்செலுத்தி அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு முற்பட்டபோது அரிசி இல்லை என்று கூறி மறைத்துவைக்கப்பட்டது தொடர்பில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் மறைத்துவைத்திருந்த அரிசியை அரசுடமையாக்கி விற்பனை செய்து கிடைக்கும் வருமானத்தை நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபையின் கணக்கில் வைப்பீடு செய்யுமாறு மாளிகாவத்தை மேலதிக நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
புறக்கோட்டை ஜோன் வீதியில் அரிசி வர்த்தகத்தை நடத்திவரும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கே நீதவான் மஞ்சுள ரத்னாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டது. அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த வேளையில் தமது அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு சென்று பணத்திற்கு அரியை கொள்வனவு செய்ய முற்பட்டபோது அரிசி இல்லை என்று கூறியதாக நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இந்த நடவடிக்கையின்போது அந்த நிறுவனத்தில் தலா 25 கிலோ எடைகொண்ட 686 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related posts: