அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று ஆரம்பம்!

Friday, May 28th, 2021

நாட்டிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளன.

இதற்கமைய இன்று  இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள்,  11 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை முன்னெடுத்திருந்தன.

மேலும் குறித்த சேவையை, திங்கள் முதல் பகல் 1 மணி வரை முன்னெடுப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நிதிகளை கையாளும் அரச திணைக்களங்கள் சில, மாத இறுதி பணிகளை முன்னெடுப்பதற்காக இன்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: