அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்!
Saturday, August 22nd, 2020அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலகக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்கள் பெயர்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
முச்சக்கரவண்டி விபத்தில் உயிரிழந்தால் 5 இலட்சம்!- புதிய திட்டம்!
சர்வதேச இரத்தினக்கல் தங்க ஆபரணக் கண்காட்சி!
கொரோனா அச்சம் - மூடப்பட்டது அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையின் துணைத்தூரகம்!
|
|