அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க நிதி அமைச்சு அனுமதி!

Friday, December 25th, 2020

அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்கும் அனுமதியை நிதி அமைச்சு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

2019 ஆம் ஆண்டிற்காக நிறுவனங்களில் கணக்கறிக்கைகளின் அடிப்படையில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும் என திறைசேரியின் செயலாளர் ஆட்டிகல்ல தெரிவித்துள்ளார்.

3000 – 15000 ரூபாய் வரை மேலதிக கொடுப்பனவுகள் வழங்குவதற்கு திறைசேரி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டில் இலாபங்களை பதிவு செய்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், குறைந்த பட்சம் நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், 2019 ஆம் ஆண்டு நஷ்டம் ஏற்படுத்தாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அதிகபட்ச கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக கொடுப்பனவுகளுக்கு திறைசேரி அனுமதி வழங்கிய சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களினதும் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: