அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Thursday, March 4th, 2021

அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அந்தந்த அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல சேவைகளை நிறைவேற்ற முடியும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட நாட்டை அபிவிருத்தி செய்யும் வேகமான நடைமுறை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, சுஹுறுபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனங்களுக்கிடையிலான உறவில் காணப்படும் விரிசலே சில திட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதற்கு காரணம் என சுட்டிக்காட்டிய பிரதமர், எதிர்காலத்தில் முறையான தகவல் தொடர்பு மூலம் இதுபோன்ற செயல்களை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்டன் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல், குறைந்த வசதிகளை கொண்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை செயற்படுத்தல், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல், கடல் மாசை தடுத்தல், மீன்வள துறைமுகங்களின் திண்மக்கழிவு மேலாண்மை, மீன்பிடி துறைமுகங்களில் மணல் அகற்றுதல், சமூக நில மேம்பாடு உள்ளிட்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்குரிய நிறுவனங்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு இதன்போது பிரதமர் தீர்வு பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: