அரச நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை – நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நடவடிக்கை!

Monday, November 28th, 2022

பல்வேறு நிகழ்வுகளுக்காக அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செலவினங்களை இடைநிறுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவினால் கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அரச நிறுவனங்களின் வருவாயைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களால் நடத்தப்படும் விழாக்கள், நட்புறவு சந்திப்புகள், மாநாடுகள், திறப்பு விழாக்கள், மாநாடுகள் போன்றவற்றுக்கான செலவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: