அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோரிக்கை என – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, December 8th, 2023

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச துறையினரின் ஊதிய அதிகரிப்புடன் சேர்த்து தனியார் துறையினரின் ஊதியத்தையும் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையின் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தனியார் துறையின் ஊதியம் அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: