அரச சேவை ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு?

Friday, April 15th, 2016

அரச சேவையில் பட்டதாரிகளை சேர்த்துக்கொள்ளும் குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆக காணப்படுகின்றது. வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், தங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார். பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுதல், பட்டதாரிகளை அரச தொழிலில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லையை 45 ஆக உயர்த்துதல் மற்றும் அரசியல் நலனுக்கான ஆட்சேர்ப்புகளை நிறுத்துதல், மாகாண சபைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேலையற்ற பட்டதாரிகள் முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என கடந்த காலத்தில் தெரிவிக்கப்பட்டபோதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

முழுங்காவில் கதிராவில் குளத்தால் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதன...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது - ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!
மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது - புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்...