முழுங்காவில் கதிராவில் குளத்தால் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதன் நடவடிக்கை!

Sunday, December 27th, 2020

முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள கதிராவில் குளம் நேற்றுக் காலையில் உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் வை.தவநாதனுக்கு அறிவிக்கப்பட்டைதையடுத்து உடனடியாக அவரது தலையீட்டால் நேரவிருந்த ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

முழங்காவில் பகுதியிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இணைப்பாளர் அமீன் மூலம் தகவலறிந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கனுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க  ஏற்பாடு செய்தார்.

உடனடியாக மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் த.ராஜகோபு மற்றும் கமநல சேவைகள் ஆணையாளர் தேவேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு குளம் உடைப்பெடுக்காமல் தடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டமைக்கமைய அவர்கள் தமது உத்தியோகத்தர்களை களத்துக்கு அனுப்பி குளம் உடைப்பெடுக்காமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.

ஏக காலத்தில் முழங்காவில் பிரதேச கிராமசேவையாளர் நகுலேஸ்வரன் களத்தில் நின்று கமநல சேவை உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்களத்தினர் மற்றும் கமக்காரர் அமைப்புப் பிரதிநிதிகளின் உதவியுடன் குளம் உடைப்பெடுக்காமல் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள 651வது பிரிகேட் படைப்பிரிவினரின் உதவியும் கோரப்பட்டதையடுத்து அவர்கள் உடனடியாக களத்துக்கு விரைந்து மண் மூடைகள் அணைத்து குளம் உடைப்பெடுக்காமல் தடுத்து நிறுத்தினர்.

இதன்மூலம் குளத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதங்கள் ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: