அரச சிறுவர் நாடக விழாவுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, May 15th, 2019

ஆண்டுதோறும் இடம்பெறும் அரச சிறுவர் நாடக விழாவுக்கான விண்ணப்பங்கள் இம்முறையும் கோரப்பட்டுள்ளன. கலாசாரத் திணைக்களத்தால் நாடு முழுவதும் நடத்தப்படும் இப் போட்டி மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு திறந்த பிரிவுகளில் இடம் பெறும்.

6-14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 15-18 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக இந் நாடக விழா அமைய வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை இம்மாத இறுதிக்குள் தங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலதிக விபரங்களை அறிய பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களை அணுக முடியும் என மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

Related posts: