அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக விசாரணை இடம்பெறுகின்றது – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்கட்சியில் இருப்பதாக குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கவனத்தில் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்றும் அவார் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதேநேரம் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்வது விடுதலை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: