அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

Untitled-2 copy Tuesday, November 14th, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றப்பட்ட விடயம் தொடர்பில் அரசாங்கம் தகுந்த தீர்வை வழங்குமாறு வலியுறுதியும் ஏனைய சகல அரசியல் கைதிகளையும் பொதுவான தீர்மானம்  ஒன்றை மேற்கொண்டு சகலரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு பேரணியை மாணவர்கள் முன்னெடுத்தனர்

இன்று காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இந்த பேரணி ஆரம்பமாகி யாழ் பலாலி வீதியூடக சென்றதுடன் யாழ் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மாணவர்கள் கையளித்தனர்

அதைத்தொடர்ந்து  பேரணி யாழ் மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் ஜனாதிபதிக்கான தமது கோரிக்கை மகஜர் ஒன்றையும் மாணவர்கள்  வடமாகண ஆளுனர் அலுவலகத்திலும் கையளித்தனர்-குரல்

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த சகல பீடங்களின் மாணவர்களும் இப்பேரணியில் கலந்துகொண்டனர்


நெடுந்தாரகை வரவால் தீவக மக்கள் மகிழ்ச்சி: நன்றி தெரிவித்து துண்டுப்பிரசுரம்!
சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம் - இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்...
அனைத்துப் பாடசாலைகளிலும் சுற்றாடல் முன்னோடித் திட்டம் - கல்வியமைச்சு
மண்டைதீவில் படகு விபத்து : 6 மாணவர்கள் பரிதாப பலி!
பரிசை நம்பி 20 இலட்சத்தை பறிகொடுத்த யுவதி!