அரசின் பக்கத்திலும் குறைபாடுகள் உள்ளன – ஜனாதிபதி

Tuesday, July 18th, 2017

குப்பைக் கூளங்கள் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு, அரசாங்கத்தின் பக்கத்திலும் குறைகள் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு குப்பை கொட்டப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பக்கத்திலும் குறைகள் உள்ளன.குப்பைக் கூளங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான உரிய விளக்கங்களை பொதுமக்களுக்கு முறையாக வழங்கவில்லை இது குறித்து கடந்த எந்த அரசாங்கமும் முன்வைக்காக விஞ்ஞான ரீதியான தீர்வை முன்வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts: