அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

Monday, November 29th, 2021

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் பல்வேறு விடயங்களை கூறினாலும் ஒரு கட்சியாக நாங்கள் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தாம் உருவாக்கிய அரசாங்கம் என்பதோடு ஜனாதிபதியையும் தாமே தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இந்த அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என தயாசிறி ஜயசேகர கூறினார்.

அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுடனும் எங்களால் உடன்பட முடியாமல் போனாலும் பங்காளிக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பேசியுள்ளதாக குறிப்பிட்டார்.

எந்தவொரு சவால்களையும் எதிர்கொண்டு, நாட்டையும் அரசாங்கத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவினை வழங்கும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: