அரசாங்கத்தினால் ஐந்து இலட்சம் மெற்ரிக் தொன் அரிசி இறக்குமதி!

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டு இன்று தொடக்கம் சதோச ஊடாக விற்பனை செய்யப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றபோதே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.
அரிசி இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்துடன் விலையை நிர்ணயிப்பதாக தெரியவந்தமையால் குறித்த வர்த்தகர்களுடன் கலந்துரையாடி விலைகுறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அடுத்துவரும் மாதங்களில் சர்வதேச சந்தை விலைகளை கருத்திலெடுக்காமல் ஐந்து இலட்சம் மெற்ரிக் தொன் அரிசியை அரசாங்கத்தின் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், சதோசவினால் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான அரிசிகளினதும் விலைகளை குறைத்து அந்த விலைகளை இன்றை தினம் அறிவிக்குமாறும் ஜனாதிபதி இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்
பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை கிலோவொன்று 65 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் கூடுதல் இலாபத்துடன் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் சதோசவினால் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலைகளை குறைக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
Related posts:
|
|