“அம்பாம் புயல்” – வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் நடவடிக்கை!

Monday, May 18th, 2020

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக உருவாகியுள்ள “அம்பாம்” புயலால் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக வடமராட்சியின் கடலோர பகுதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

குறிப்பாக அம்பாம் புயல் காரணமாக பொலிகண்டி கிழக்கு கரையோரப் பகுதிகளில் உள்ள பல வீடுகளின் மீது பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

அத்துடன் கடற்றொழிலாளர்களின் வலைகள் வள்ளங்களும் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன் தொழிற்றுறை உபகரணங்களுடன் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த வாடிகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்நததால் அப்பகுதியின் மின்சார விநியோகமும் முற்றாக செயலிழந்து காணப்பட்டுது.

இந்நிலையில் குறித்த மக்களின் அவலங்களை போக்கும் வகையில் இன்று காலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியிருந்ததுடன் பருத்தித்துறை பிரதேச செயலருடன் தொடர்புகொண்டு அனர்த்த முகாமைத்துவத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரங்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திந்தார்.

அத்துடன் மின்சார சபை அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி குறித்த பகுதிக்கான மின் விநியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளையும் ஈ.பி.டி.பியின் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: