அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுகள் யாவும் ஊர்காவற்றுறை மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கிராமங்கள் தோறும் வாழும் வறிய மக்களின் தேவைகள் கருதி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப் பின்மை பிரச்சினைக்கு தீர்வாக புதிய சுய தொழில் வாய்ப்பு நடவடிக்கைகளையும் ஊக்கவிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிழவுகள் மற்றும் செயற்றிட்டங்களை ஊர்காவற்றுறை பிரதேச மக்களிடம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் தவிசாளர் ஜெயகாந்தனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

கடந்த காலங்களிவுலும் சரி தற்போதும் சரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவில் இப்பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. குறிப்பாக அண்மையில் வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன எமது பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது இது இப்பிரதேசத்தின் அபிவிருத்தியின் மற்றுமொரு அங்கமாகும்.

அதேபோல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் தற்போது எமது பிரதேசத்திற்கு கிடைத்துள்ளதுடன் காரைநகர் ஊர்காவற்றுறைக்கான போக்குவரத்து பாதை சேவையும் சீர் செய்யப்பட்டு பயணிகள் எதிர்கொண்ட இடையூறுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது..

அதேபோல நாளாந்தம் எமது அலுவலகத்திற்கு பலதரப்பட்ட பிரச்சினைகளுடன் வருகைதரும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை எம்மிடம் முன்வைத்தவண்ணம் உள்ளனர். அம்மக்களின் கோரிக்கைகளை அனைத்தையும் நாம் அவதானத்தில் கொள்ளதுடன் எமது சபையால் நிவர்த்தி செய்யக் கூடிய தேவைகளை உடனுக்குடன் மேற்கொண்டு தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோல வீடமைப்பு வாழ்வாதாரம், சுயதொழில் வாய்ப்பு அரச தொழில்வாய்ப்பு உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பிலான மக்களின் கோரிக்கைகளை எமது கட்சியின் செயலாளர் நாயகமும் மத்திய அரசில் இருக்கும் சிரேஸ்ட அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை வழங்கிவருகின்றோம்.

இதன் பயனாக அண்மையில் பல குடும்பங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான விட்டுத்திட்டம்  பெற்றுக்கொடுக்கப்பட்டு அவற்றின் கட்டுமாண பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்ட வருகின்றன. அதேபோல வறிய மக்களின் தேவை கருதி இலவச மின்சாரம் வீதி செப்பனிடல் மற்றும் வீதி அமைத்தல் மலசலகூடம் அமைத்தல் உள்ளிட்ட பெரும் பணிகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் எமது பிரதேசத்திற்கு நாம் மக்கள் பயன்பெறும் வகையில் பெற்றும் கொடுத்தவண்ணம் இருக்கின்றோம்

அத்துடன் கடந்த காலங்களைப்போல தற்போதும் இப்பிரதேசத்தில் வாழும் இளைஞர் யுவதிகளின் கல்வித் தரத்திற்கேற்ப அரச தொழில் வாய்ப்புகளையும் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மட்டுமல்லாது இப்பிரதேச இளைஞர் யுவதிகளின் தொழில் தேவை கருதி சுயதொழில் நடவடிக்கைகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: