அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் விஷேட நிகழ்வுகள்!

Tuesday, November 10th, 2020


நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்தி தினமாகும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் வடக்கு கிழைக்கு மாகாணத்தின் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுள் நடைபெற்றன..
குறிப்பாக வரலாற்று சிறப்பமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் புன்னாலைக்கட்டுவன் ஐயநார் அலயம் உள்ளிட்ட ஆலயங்களில் இன்றையதினம் விசேட பூசை வழிபாடுகள் கட்சியின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானமும் வழங்கப்பட்டுள்ளது.
குருதிக்கொடையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கட்சியின் ஆதரவாளர்களால் வறிய குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கற்றல் உவகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் காவியமான முதலாவது பெண் போராளியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோத...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிச...
அபிவிருத்தி - தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேண நடவடிக்கை - மத்திய ...