அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகை கந்தன்குள மக்களுக்கு புதிய மலர்ச்சியை கொடுக்கும் – கிராமத் தலைவர் ஞானசேகரன் தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020

சுமார் ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கந்தன் குளத்திற்கு முதற் தடவையாக அமைச்சர் ஒருவர் வருகை தந்திருக்கின்றார். அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகை இந்தக் கிராமத்தற்கு புதிய மலர்ச்சியை கொடுக்கும் எமக்கெல்லாம் புதிய வாழ்வை கொடுக்கும் என்று கந்தன் குளம் கிராமத்தின் தலைவர் கணபதி ஞானசேகரன் தெரிவித்துள்ளார் .

வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போது வவுனியா, கந்தன் குளம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மகக்கள் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: