அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை – திலீபன் MP நடவடிக்கை – பணிக்கர் புளியங்குளம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!

Sunday, June 9th, 2024


……..
பணிக்கர் புளியங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் அபிலாசையும் எதிர்பார்ப்பாகவும் இருந்த, வனவளத் திணைக்களத்தின் பிடிக்குள் இருந்துவந்த காணி நிலங்கள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைபுக் குழு தலைவருமான குலசிங்கம் திலீபனின் தொடர் முயற்சியால் மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணிக்கர் புளியங்குளம் மற்றும் அதனை அண்டிய சுமார் 235 ஏக்கர் காணி நிலங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டு பணிக்கர் புளியங்குளம் கிராம மக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.

விவசாய செய்கைக்கு உகந்த நிலமாக காணப்பட்ட குறித்த குளம் மற்றும் அதனைச் சூழவுள்ள காணி நிலங்கள் நீண்ட காலமாக வனவளத்
திணைக்களத்தின் பிடிக்குள் இருத்துவந்ததால் குறித்த பகுதி மக்கள் விவசாய செய்கைகளில் ஈடுபடுவதிலோ அன்றி தமது வேறு விடயங்களை முன்னெடுப்பதற்கோ முடியாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வந்ததுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்திருந்தனர்

இந்நிலையில் குறித்த நிலங்களை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உருப்பினர் திலீபனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த மக்களின் கோரிக்கையின் நியாயத்தன்மையை கருத்தில் கொண்ட திலீபந் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலுடன் பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகள், விமர்சனங்கலுக்கு மத்தியில்
வனவளத் திணைக்கள அதிகாரிகளோடு இணைந்து பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளார். .

விடுவிக்கப்பட்ட சுமார் 235 ஏக்கர் காணி நிலங்ளில்,
அங்கு வாழும் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி கிடைப்பது உறுதி செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது
000

Related posts: