அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

Friday, November 22nd, 2019

அரச நிறுவனங்களிற்கான தலைவர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் சட்டரீதியான அரச நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக்களை தெரிவு செய்ய தேர்வுக்குழுவொன்றை நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் 15 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை பதவியேற்றதை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை பதவியேற்பார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள் அனைவரும் தமது அமைச்சு நடவடிக்கைகளில் தம்முடன் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, பொதுமக்கள் தம் மீது பெரும் எதிர்பார்ப் கொண்டுள்ள நிலையில் அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு அரசியலை விரும்பாத மக்களின் அணுகுமுறையை மாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் முந்தைய அரசில் சில நிறுவனங்கள் நட்டத்தை எதிர்கொண்டிருந்ததனால் திறைசேரி பெரும் சுமையை சந்தித்ததாகவும் குறிப்பிட்ட அவர், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு, தொழில்தகுதி அவசியமற்ற துறைகளின் ஊடாக வேலை வாய்ப்புகளை வழங்குமாறும் அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts: