அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

Monday, September 11th, 2023

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, மக்கள் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (08) 314.34 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.85 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.11 ரூபாவிலிருந்து, 328.60 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (08) 314.73 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.24 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து, 325.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (08) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும், 327 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர் - யூ.ஆர் ...
சுயநல ஆயுத வன்முறையே 13 ஐ கிடப்பில் போடச் செய்தது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்...
கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரி...