அமெரிக்க உதவி செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் இலங்கை வருகை!

Tuesday, August 9th, 2016

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவி  செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. .

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியினால் ஆரம்பிக்கப்பட் ஆசியா வுடனான இணைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாக சாள்ஸ் எச். ரிவ்கினின்  இலங்கை விஜயம் தொடர்பில்  இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். மேலும்  வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

அமெரிக்க முதலீடுகள் மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அமெரிக்காவின் அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சாள்ஸ் எச். ரிவ்கின்  தனது விஜயத்தின் போது அவதானம் செலுத்த உள்ளார்.துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் மியன்மார் விஜயத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: