அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா : ஒரே நாளில் 2,349 பேர் பலி..!

Wednesday, April 15th, 2020

கொரோனா தெமாற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 349 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் குறித்த தொற்றுக்கு உள்ளான மேலும் 25 ஆயிரத்து 379 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இதனடிப்படையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளதோடு 6 இலட்சத்து 12 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 778 பேர் பலியாகியுள்ளனர் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் பிரித்தானியாவில் இதுவரை 12 ஆயிரத்து 107 பேர் பலியாகியுள்ளதோடு 93 ஆயிரத்து 973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர ஸ்பெயினில் 499 பேரும், இத்தாலியில் 602 பேரும் பிரான்சில் 762 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 537 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 19 லட்சத்து 95 ஆயிரத்து 947 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுகாதார அமைப்புகளின் தகவல்களின் பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை 4 இலட்சத்து 78 ஆயிரத்து 315 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: