அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் 3 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!

Sunday, March 17th, 2024

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3  வீதத்தால் குறைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன..

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  தெரியவருகிறது.

கடந்த காலத்தில் 12 சதவீதமாக இருந்த வற் வரி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின்படி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

எவ்வாறாயினும், வற் வீதம் 3 சதவீதம் குறைக்கப்பட்டால், வருடாந்த வற் வரி வருமானம் சுமார் 300 பில்லியன் ரூபாவால் குறையும் என நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது - அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்...
வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரக...
மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அதிரடி நடவ...