அமரர் கந்தராசா நாகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய அஞ்சலி மரியாதை.!

Friday, February 22nd, 2019

அமரர் கந்தராசா நாகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.

அராலி வீதி, (செழியன் வீதி) ஓட்டுமடத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப்பினர் சில்வஸ்திரி அலன்ரின், ஊர்காவற்றுறை பிதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், மற்றும் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி ஜெயந்தினி உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு மர்லவளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

காலஞ்சென்ற அமரர் கந்தராசா நாகேஸ்வரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: