அப்துல் கலாமின் ஜனன தினம் யாழ்ப்பாணத்தில்!

Saturday, October 15th, 2016

 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாமின் 85வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுக்கூறப்படுகின்றது.

யாழ்ப்பாண பிரதான நூலகத்தில் உள்ள இந்திய நிலையத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு கலாநிதி அப்துல் கலாமை நினைவுக்கூறவுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு கலாநிதி அப்துல் கலாம் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dr.Abdul-Kalam

Related posts: