அபுதாபி-இலங்கை நல்லுறவைக் கட்டியெழுப்ப முயற்சி!

Saturday, September 16th, 2017

அபுதாபி மற்றும் இலங்கைக்கு இடையில் நெருக்கமான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தலதா அதுகோரள மேற்கொண்டுள்ளார்.

அபுதாபிக்கு தற்போது சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அதுகோரள, இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.இதன் ஒருகட்டமாக அவர் அபுதாபியின் தொழில் மற்றும் மனித வள அமைச்சருடன் நேற்று சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் அவர் அபுதாபி பொருளாதார ஒத்துழைப்புக்கான கலந்துரையாடல் அமைப்பின் அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களையும் சந்தித்துள்ளார்.தற்போதைக்கு 18 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் மேற்குறித்த அமைப்பின் தலைமைத்துவப் பதவி எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக அமைச்சர் தலதா அதுகோரள செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: