அனைத்து பாடசாலைகளிலும் ஜனாதிபதி !

Tuesday, May 23rd, 2017

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை காட்சிப்படுத்துமாறு கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எம்.எல்.கம்மன்பில கடிதம் மூலம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தை காட்சிபடுத்தாத பாடசாலைகளில் உடனடியாக காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவி ஏற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் பாடசாலைகளினுள் ஜனாதிபதியின் புகைப்படங்கள் காட்சி படுத்தாமல் உள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தினால் 2017 -04-06 என்ற திகதியன்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட உதவி செயலாளர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்த கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வலய கல்வி அலுவலகங்களுக்கு சொந்தமான பாடசாலைகளில் இதுவரையில் ஜனாதிபதியின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என்றால், தேவையான புகைப்படங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மகிந்த அரசிடமிருந்து அன்று நாம் பெற்றுத்தந்தது போல...
இலங்கையின் பொருளாதார மீட்சி சவாலாகவே உள்ளது - சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ...
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பு - அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார் ஜனாதிபதி ...