அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, September 7th, 2021

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு குறித்த கட்டளைச் சட்டத்தின்  5 ஆவது சரத்துக்கமைய, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

நெல், அரிசி, சீனி உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாக பதுக்கி, வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வர்த்தகர்களின் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஜனாதிபதி அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பான கட்டாய விதிமுறைகளை பிரகடனப்படுத்தினார். இதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தையும் ஜனாதிபதி நியமித்திருந்தார்.

அரசாங்கத்தின் நிர்ணய விலை அல்லது இறக்குமதி விலையினை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு சாதாரண விலையில் விற்பனை செய்வதற்காக அதிகாரிகளை கொண்டு நடத்த முடியும்.

அத்துடன், மொத்த கொள்முதலுக்காக அரச வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள், கடன் உரிமையாளர்களிடமிருந்து அறவிடுவதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


குறைந்த வருமானம் பெறும் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் ...
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானம்!
21 ஆம் திகதிமுதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும...