அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு புதிய இலத்திரனியல் அட்டை!

Sunday, March 31st, 2019

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கொடுப்பனவு முறை மூலம், அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் கட்டணத்தை செலுத்தும் பணிகளை செயற்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜாஎல, சீதுவ மற்றும் கட்டுநாயக்க இடமாறல் மத்திய நிலையத்தில் இந்த இலத்திரனியல் அட்டையை பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இதற்கான பதிவினை மேற்கொள்ள முடியுமெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: