அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!

Thursday, April 4th, 2019

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மே மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

சம்பள பிரச்சினைகள் உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.

கடந்த மார்ச் 13 ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் அதிபர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்த போதிலும் இதுவரை அரசு சாதகமான தீர்வொன்றினை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: