அதிபரது திடீர் இடமாற்றத்தை கண்டித்து மன்னார் முருங்கனில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

Friday, October 2nd, 2020

மன்னார் – முருங்கன் ஆரம்பப் பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இன்று காலைமுதல் பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலையின் அதிபரை திடீர் என இடமாற்றம் செய்தமையை கண்டித்து, கடந்த 30ஆம் திகதி போராட்டம் மேற்கொள்ளப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் இன்று வரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் பாடசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: