அதிக வளர்ச்சி வீதத்தால் சாதனை படைத்தது கொழும்பு துறைமுகம்!

Tuesday, May 29th, 2018

உலகின் அதிக வளர்ச்சி வீதத்தை வெளிப்படுத்தும் துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் கொள்கலன் செயற்பாடுகள் 16.2 வீத வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

முதலாவது இடத்தை அதிக வளர்ச்சியுடைய சிங்கப்பூர் துறைமுகம் பதிவு செய்துள்ளது. அதன் வீதம் 16.5 ஆக பதிவாகியுள்ளது.

மூன்றாவது இடத்தை சீனாவின் சியாமென் துறைமுகமும் நான்காம் இடத்தை ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் என்ட்வீப் துறைமுகமும் பெற்றுள்ளது.

உலக துறைமுக வகைப்படுத்தலின் கீழ் கொழும்பு துறைமுகத்திற்கு 23 வது இடம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் செயல்பாடுகள் 6.2 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: