அதிகாரசபைகளை கலைத்து புதிய சபைகளை நியமிக்குமாறு பணிப்பு – ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, October 26th, 2018

ஆயுட்காலம் முடிவடையும் மாகாணசபைகளில் செயற்படும் அதிகார சபைகளை கலைத்துவிட்டு புதிய சபைகளை நியமிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

கடந்த 22-10-2018 அன்று ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள், தலைமைச்செயலாளர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி குறிப்பிடுகையில்; ஆயுட்காலம் முடிவடைந்த மாகாணசபைகள் மற்றும் ஆயுட்காலம் முடிவடையவுள்ள மாகாணசபைகளில் இயங்கும் அதிகாரசபைகளை அந்தந்த திகதிகளில் கலைத்துவிட்டு புதிய அதிகார சபைகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு உண்டு.

இதேவேளை வடக்கு மாகாணசபையில் மிகக் குறைந்த அதிகார சபைகளான இரண்டு அதிகார சபைகள் செயற்படுகின்றன. இதில் ஒரு அதிகார சபையான போக்குவரத்து அதிகார சபைக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் கடந்த  முதலாம் திகதியிட்ட கடிதம் மூலமாக முன்னாள் தலைவரை பதவி நீக்கி புதியவரை நியமித்து ஓர் அரசியல் பழிவாங்கலை மேற்கொண்டார் என சர்ச்சை ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் .

Related posts: