அதிகரித்த வெப்பநிலையால் குழந்தைகளுக்கு ஆபத்து! – சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா

Tuesday, March 22nd, 2016
தற்போது நாட்டில் நிலவிவரும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ் அதிகரித்த வெப்பநிலையால் குழந்தைகளின் இருதயம் மற்றும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உடலில் நீர் குறைவடைவதனால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருப்பதனை தவிர்ப்பதுவும், அதிகளவு நீரைப் பருகுவதும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: