அடுத்த வருடமே தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய!

Sunday, August 4th, 2019

இம்மாதம் 15ஆம் திகதி முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்காவிட்டால் இந்த வருடத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முடியாமல் போகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவு எதிர்வரும் 10 நாட்களுக்குள் கிடைக்கப்பெறாவிட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களுடன் முரண்படும் என்றும் அதன் காரணமாக மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடமே நடத்தவேண்டி ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, செப்டெம்பர் 20 மற்றும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலானது 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: