அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் – லாப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Friday, May 27th, 2022

அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வெகபிடிய தெரிவித்துள்ளார்.

அடுத்த 06 நாட்களுக்குள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என என தெரிவித்தார்.

லாப்ஸ் எரிவாயு சமீப காலமாக சந்தைக்கு வெளியிடப்படாததால் அந்த நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, இன்றும் சிலிண்டர்களை விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: