அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்து

Saturday, August 21st, 2021

நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்தால் அடுத்த இரு வாரங்களில் கொவிட் நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாகக் குறைக்கப்படலாம் என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் கூறியுள்ளது.

அத்துடன் சமூகத்தின் மத்தியில் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் கடந்த வாரம் முழுதும் பதிவான தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிர்களுக்கும் நாட்டுக்கும் மீள முடியாத பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் 10 நாட்களுக்குப் பிறகும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

ஊரடங்கு உத்தரவு விதித்ததன் பலனைப் பெறுவதற்காக பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.

பல குழுக்கள் முடக்குதலின் அவசியத்தை சுட்டிக்காட்டியதால் பொறுப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன் அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் அதிகாரிகள் வழங்கிய அனுமதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: